வங்காளதேசத்தின் மிகப்பொிய பாலத்தை அதிபா் ஷேக் ஹசீனா திறந்து வைத்தார்


வங்காளதேசத்தின் மிகப்பொிய பாலத்தை அதிபா் ஷேக் ஹசீனா திறந்து வைத்தார்
x

வங்காளதேசத்தில் பத்மா ஆற்றின் மீது 6.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்ட பாலத்தை அந்நாட்டு அதிபா் ஷேக் ஹசீனா திறந்து வைத்தார்.

டாக்கா,

வங்காளதேசத்தில் ஓடும் பத்மா ஆற்றின் மீது 6.15 கீ.மீ நீளம் கொண்ட பாலத்தை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சுமாா் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

சாலை, ரயில் என நான்கு வழி போக்குவரத்து வசதியுடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை வங்காளதேச அதிபா் ஷேக் ஹசீனா இன்று திறந்து வைத்தார்.

வங்காளதேசத்தின் 19 தென்மேற்கு மாவட்டங்களை மற்ற பகுதிகளுடன் இந்த பாலம் இணைக்கிறது.இதனால் அந்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும் என்று கருதப்படுகிறது. வெளிநாட்டு நிதி உதவி இன்றி முற்றிலும் உள்நாட்டு நிதியளிப்புடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டுஅதிபா் ஷேக் ஹசீனா கூறுகையில், "இந்த பாலம் வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு மற்றும் கான்கிரீட் அல்ல. இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை மற்றும் நமது கண்ணியத்தின் சின்னம். இந்த பாலம் வங்கதேச மக்களுக்கு சொந்தமானது,"

மேலும், இது நமது ஆர்வம், படைப்பாற்றல், தைரியம், சகிப்புத்தன்மை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை உள்ளடக்கியது" என்று அவர் கூறினார்.


Next Story