ராஜ்நாத் சிங் வியட்நாமுக்கு 3 நாள் பயணம்: பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து


ராஜ்நாத் சிங் வியட்நாமுக்கு 3 நாள் பயணம்: பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து
x

ராணுவ மந்திாி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்றுள்ளாா்.

வியட்நாம்,

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று வியட்நாம் சென்று உள்ளாா். 10-ந்தேதி வரை அங்கு தங்கியிருக்கும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுபட உள்ளாா்.

வியட்நாமில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு மந்திரி ஜெனரல் ஃபான் வான் ஜியாங்கை சந்தித்து பேசினாா். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் உலகளவிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு "2030 ஆம் ஆண்டிற்கான இந்தியா-வியட்நாம் பாதுகாப்புக் கூட்டாண்மை குறித்த கூட்டு பார்வை அறிக்கையில்" இருவரும் கையெழுத்திட்டனா்.

முன்னதாக, ஹனோயில் உள்ள மறைந்த அதிபர் ஹோ சி மின்னின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். வியட்நாம் அதிபர் நுயன் ஜுவான் பக்கை இன்று சந்தித்து பேசினாா்.


Next Story