சிறந்த பிரதமராக ரிஷி சுனக் செயல்படுவார்; ஜேம்ஸ் கிளெவர்லி பேட்டி


சிறந்த பிரதமராக ரிஷி சுனக் செயல்படுவார்; ஜேம்ஸ் கிளெவர்லி பேட்டி
x

இங்கிலாந்தின் சிறந்த பிரதமராக ரிஷி சுனக் செயல்படுவார் என எனக்கு தெரியும் என்று ஜேம்ஸ் கிளெவர்லி பேட்டியில் கூறியுள்ளார்.



புதுடெல்லி,


இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி, இரு நாட்டு தூதரக உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறார் என்றும் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து பேச இருக்கிறார் என்றும் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்தது.

இதேபோன்று, இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று கொண்ட, கடந்த செவ்வாய் கிழமையன்று மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு கிளெவர்லி பேசினார். இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லியிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதன்பின் இருவரும், பயங்கரவாத ஒழிப்பு, இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் உக்ரைன் மோதல் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொண்டோம் வேறு விவரங்கள் எதனையும் பகிர்ந்து கொள்ளவில்லை என பதிவிட்டார்.

இதன்படி, இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி டெல்லிக்கு இன்று வந்த சேர்ந்து நிலையில், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத ஒழிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் இன்று பேசும்போது, சர்வதேச அளவிலான பயங்கரவாத ஆள்சேர்ப்பு பிரசாரங்கள் மற்றும் தாக்குதல்களை லைவ்வாக வெளியிடுவது உள்ளிட்ட ஆன்லைன் வழியேயான பயங்கரவாதத்திற்கு எதிராக போராட நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ரிஷியுடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. ரிஷி சுனக் சிறந்த பிரதமராக செயல்படுவார் என எனக்கு தெரியும் என்று கிளெவர்லி கூறியுள்ளார்.


Next Story