அதிபர் ஜோ பைடன் - உக்ரைன் அதிபர் பேச்சு


அதிபர் ஜோ பைடன் - உக்ரைன் அதிபர் பேச்சு
x

கோப்புப்படம்

உக்ரைன்-ரஷியா போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடத்தை தாண்டி உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.

இதற்கிடையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ நோக்கி முன்னோக்கி செல்ல இருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ரஷியாவில் ஆயுத புறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது.

பின்னர், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக எவ்ஜெனி புரிகோசின் தெரிவித்தார். இதனால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷியாவில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்து விவாதித்ததாகவும், அமெரிக்கா - உக்ரைன் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உக்ரைனின் தற்போதைய எதிர் தாக்குதல் குறித்து விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.



Next Story