ஆன்மிகம்

இறை பாதை + "||" + Divine Path

இறை பாதை

இறை பாதை
எல்லாப் பாதைகள் வழியாகவும் இறைவனை அடைய முடியும். தூரமாக உள்ள கோவிலுக்கு சிலர் காரில் செல்வார்கள்.
ல்லாப் பாதைகள் வழியாகவும் இறைவனை அடைய முடியும். தூரமாக உள்ள கோவிலுக்கு சிலர் காரில் செல்வார்கள்.  சிலர் சைக்கிளில் செல்வார்கள். இன்னும் சிலர் நடந்து கூட செல்வார்கள். யாருக்கு எது சுலபமோ, யாரால் எது முடியுமோ அவ்வாறு கோவிலை அடைவார்கள். அனைவரும் செல்வது ஆலயத்திற்கே. சிலர் முன்பாக செல்வார்கள். சிலர் தாமதமாக செல்வார்கள், அவ்வளவுதான்.

–ராமகிருஷ்ணர்.

மனம்

விசாரம் என்பது துயர் களைவது. ஆத்ம விசாரம் பெருமைக்குரியது மட்டுமல்ல, தூய்மைக்குரியதும் ஆகும். ஒவ்வொரு எண்ணத்தையும் விலக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். ‘நான்’ என்ற எண்ணத்தைப் பிடித்துக் கொண்டு அந்த ஒரே எண்ணத்தில் இருந்தால், மற்ற எண்ணங்கள் அனைத்தும் விலக்கப்பட்டு தாமாகவே ஒழியும்.

–ரமணர்.

சமுதாயம்

மற்றவர்களிடம் தீய தன்மை இருப்பதாக நீங்கள் உணராதீர்கள். தீய தன்மை பல வீனத்தாலும், அறியாமையாலும் ஏற்படு கிறது. சமுதாயத்தில் மக்களிடம் நீங்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வதனால் என்ன நன்மை ஏற் படப்போகிறது? குறை கூறுவதாலும், அழிவு முறையாலும் எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. இவற்றைவிட உயர்ந்தது எதையாவது அவர் களுக்கு நாம் தர வேண்டும்.

–விவேகானந்தர்.