ஐந்து வகை சிவராத்திரி


ஐந்து வகை சிவராத்திரி
x
தினத்தந்தி 21 Feb 2017 7:58 AM GMT (Updated: 21 Feb 2017 7:58 AM GMT)

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி கூடிய புண்ணிய தினத்தில் மகா சிவராத்திரி வருகின்றது. சக்திக்கு ஒன்பது ராத்திரி– நவராத்திரி என்பது போல், சிவனுக்கு ஒரு ராத்திரி– சிவராத்திரி ஆகும்.

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி கூடிய புண்ணிய தினத்தில் மகா சிவராத்திரி வருகின்றது. சக்திக்கு ஒன்பது ராத்திரி– நவராத்திரி என்பது போல், சிவனுக்கு ஒரு ராத்திரி– சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரியானது ஐந்து வகையாக கொண்டாடப்படுகின்றது. அவை முறையே மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்பனவாகும்.

*     மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

*     திங்கட்கிழமை முழுவதும் அமாவாசையாக வந்தால் அது யோக சிவராத்திரி எனப்படும்.

*     பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி, வளர்பிறை சதுர்த்தசி ஆகிய இருபத்து நான்கும் நித்திய சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

*     தை மாதம் தேய்பிறைப் பிரதமை தொடங்கி 13 நாட்கள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது உணவு உண்டு, பதினான்காவது நாளான சதுர்த்தசியன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி ஆகும்.

*     மாதம் தோறும் வரும் அமாவாசைக்கு முன்தினமாகிய சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி என்று அழைக்கப்படும்.

இவற்றில் ஒன்றையோ, இரண்டையோ, மூன்றையோ, நான்கையோ அல்லது ஐந்தையுமோ அவரவர் சக்திக்கு ஏற்ப கடைப்பிடிக்கலாம்.

Next Story