மரகத மேனியாள்


மரகத மேனியாள்
x
தினத்தந்தி 21 Feb 2017 8:10 AM GMT (Updated: 21 Feb 2017 8:10 AM GMT)

அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.

ம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலையானது மரகதக் கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னை மீனாட்சிக்கு பல பெயர்கள் இருந்தாலும், அங்கயற்கண்ணி என்ற திருநாமம், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால், அம்மனுக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

மீனாட்சி அம்மன், இங்கு நின்ற கோலத்தில், இடை நெளித்து கையில் கிளியை ஏந்தியபடி அருள்பாலிக் கிறாள். அன்னையின் சன்னிதிக்கு இடது பக்கத்தில் உள் கருவறையில் சுவாமி சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். இந்த ஆலயமானது பெண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்தது என்பதால், அம்மனின் இடபக்கம் சுவாமி வீற்றிருப்பதாக ஐதீகம்.

Next Story