ஆன்மிகம்

தினமும் அன்னாபிஷேகம் + "||" + Everyday annapisekam

தினமும் அன்னாபிஷேகம்

தினமும் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படும். அதுதான் வழக்கமான ஒன்று.
ப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படும். அதுதான் வழக்கமான ஒன்று. மற்ற நாட்களில் சாதாரண அபிஷேக, ஆராதனைகள் மட்டுமே நடைபெறும். ஆனால் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில், மாதம் தோறும் வரும் அமாவாசை தினங்களில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள், இந்த அமாவாசை அன்று விளமல் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடுகிறார்கள். பின்னர் பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, முன்னோர்கள் மோட்சம் பெறுவதற்காக மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பாக கூறப்படுகிறது. அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.