சங்கரநாராயணர்


சங்கரநாராயணர்
x
தினத்தந்தி 21 March 2017 10:31 AM GMT (Updated: 21 March 2017 10:31 AM GMT)

திருமாலுக்குரிய இடது பாகத்தில் நவமணி, கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசி மணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராஜபாளையம் திருத்தலத்தில் சங்கரநாராயணர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் சிவன், அம்பாள் சன்னிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சன்னிதி அமைந்துள்ளது. சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை சந்திரன், அக்னி ஜடாமுடி ஆகியவை உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை போன்றவையும் இருக்கின்றன. திருவாசியில் நாகவடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

திருமாலுக்குரிய இடது பாகத்தில் நவமணி, கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசி மணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறார். இந்தச் சன்னிதியில் காலை பூஜையில் மட்டும் துளசி தீர்த்தம் தரப்படுகிறது. மற்ற நேரங்களில் விபூதி பிரசாதம் வழங்குகிறார்கள்.

Next Story