இந்த வார விசே‌ஷங்கள் 11–4–2017 முதல் 17–4–2017 வரை


இந்த வார விசே‌ஷங்கள் 11–4–2017 முதல் 17–4–2017 வரை
x
தினத்தந்தி 11 April 2017 1:45 AM GMT (Updated: 10 April 2017 12:30 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதி உலா.

11–ந் தேதி (செவ்வாய்)

    திருநெல்வேலி வீரராகவபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் சித்திரை உற்சவம் ஆரம்பம்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் விடையாற்று உற்சவம்.

    மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலமாய் காட்சியருளல்.

    குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.

    சமயபுரம் மாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதி உலா.

    சமநோக்கு நாள்.

12–ந் தேதி (புதன்)

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வருசாபிஷேகம்.

    திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் எண்ணெய்க் காப்பு உற்சவம்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

    சமயபுரம் மாரியம்மன் அன்ன வாகனத்தில்  வீதி உலா.

    சமநோக்கு நாள்.

13–ந் தேதி (வியாழன்)

    சென்னை சென்ன கேசவப்பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சே‌ஷ வாகனத்தில் புறப்பாடு.

    சென்னை மல்லீஸ்வரர் ஆலயத்தில் விடையாற்று உற்சவம்.

    சமயபுரம் மாரியம்மன் விருட்ச வாகனத்தில் பவனி.

    சமநோக்கு நாள்.

14–ந் தேதி (வெள்ளி)


 தமிழ் வருடப் பிறப்பு

    புனித வெள்ளி.

    சங்கடஹர சதுர்த்தி.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் அன்னாபிஷேகம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்.

    சென்னை சென்ன கேசவப்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்களில் கருட வாகனம்.

    கீழ்நோக்கு நாள்.

15–ந் தேதி (சனி)

    திருமலை திருப்பதியில் திருப்படி விழா.

    சென்னை சென்ன கேசவப்பெருமாள் காலை சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இரவு சந்திர பிரபை வாகனத்தில் பவனி.

    பாபநாசம் சிவபெருமான் வெள்ளி விருட்ச சேவை.

    சமயபுரம் மாரியம்மன் அம்ச வாகனத்தில் புறப்பாடு.

    சமநோக்கு நாள்.

16–ந் தேதி (ஞாயிறு)

    ஈஸ்டர்.

    கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    சென்னை சென்னகேச வப்பெருமாள், இரவு நாச்சியார் திருக்கோலமாய் தங்கப் பல்லக்கில் பவனி.

    சமயபுரம் மாரியம்மன் மரக் குதிரையில் புறப்பாடு.

    சமநோக்கு நாள்.

17–ந் தேதி (திங்கள்)

    முகூர்த்த நாள்.

    மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.

    சென்னை சென்னகேசவப்பெருமாள் காலை தங்க தொட்டியில் சூர்ணாபிஷேகம்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இரவு யானை வாகனத்தில் புண்ணியகோடி விமான சேவை.

    சமயபுரம் மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    கீழ்நோக்கு நாள்.

Next Story