திசைகளின் காலம் 120 ஆண்டுகள்


திசைகளின் காலம் 120 ஆண்டுகள்
x
தினத்தந்தி 13 April 2017 3:10 PM IST (Updated: 13 April 2017 3:09 PM IST)
t-max-icont-min-icon

சுழலும் கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் தான், நமக்கு உழலும் வாழ்க்கை இல்லாமல் உன்னத வாழ்க்கை அமையும்.

 வான மண்டலத்தில் சுழற்சியாகும் கிரகநிலை அமைப்பின் படியே ஒவ்வொருவருக்கும் வசதி, வாய்ப்புகள் உருவாகின்றன என்கிறது வான சாஸ்திரம். கிரகங்களின் ஆதிக்கம் நமக்குத் திசையாக நடந்தாலும் சரி, புத்தியாக நடந்தாலும் சரி, அதற்குரிய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் வாழ்வு வளமாகும். வரும் தடைகள் அகன்றோடும்.

ஒன்பது திசைகள் நமது வாழ்க்கையில் நடைபெறும் என்று பஞ்சாங்கங்கள் சொல்கின்றன. அவை:- சூரிய திசை 6 வருடங்கள், சந்திர திசை 10 வருடங்கள், செவ்வாய் திசை 7 வருடங்கள், ராகுதிசை 18 வருடங்கள், குருதிசை 16 வருடங்கள், சனி திசை 19 வருடங்கள், புதன்திசை 17 வருடங்கள், கேது திசை 7 வருடங்கள், சுக்ர திசை 20 வருடங்கள் ஆக மொத்தம் 9 திசைகளும், ஒருவருக்கு நடைபெற்றால் 120 வருடங்கள் நடைபெறும். கடந்த காலங்களில் மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இயற்கை மாறுபாட்டால் மனித வாழ்வின் கால அளவை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. இருந்தாலும் தொண்ணூறு வருடங்களுக்கு மேலாக பலரும் இருப்பதைப் பார்க்கின்றோம்.

தசாபுத்தி 120 வருடத்தில் சரிபாதி 60 வருடம் என்று வருகிற பொழுது, 60 வயதில் மணி விழாவும், 70 வயதில் பீமரத சாந்தியும், 80 வயதில் சதாபிஷேகமும், 100 வயதில் நூற்றாண்டு விழாவும் நடத்துகிறார்கள். ஒருவருக்கு ஆயுள் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டுமானால், அன்றாட வாழ்வில் பிரச்சினைகளைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், காரியங்கள் காலதாமதமின்றி நடைபெற வேண்டுமானால் கடவுள் வழிபாடு அவசியம்.


Next Story