ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்30-5-2017 முதல் 5-6-2017 வரை + "||" + This Week Occasions

இந்த வார விசேஷங்கள்30-5-2017 முதல் 5-6-2017 வரை

இந்த வார விசேஷங்கள்30-5-2017 முதல் 5-6-2017 வரை
பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
30-ந் தேதி (செவ்வாய்)

* திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம், அம்ச வாகனத்தில் வீதி உலா.

* உத்தமர் கோவில் சிவ பெருமான் சூரிய பிரபையில் பவனி.

* நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உற்சவம் தொடக்கம்.


* மேல்நோக்கு நாள்.

31-ந் தேதி (புதன்)

* சஷ்டி விரதம்.

* மதுரை கூடலழகர் கோவில் உற்சவம் தொடக்கம்.

* திருமோகூர் காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை.

* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்க புன்னை மர வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* சோழவந்தான் ஜெனக மாரியம்மன் யாழி வாகனத்தில் புறப்பாடு.

* நயினார் கோவில் நாக நாதர் இந்திர விமானத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

1-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.

* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தங்க திருப்புலி வாகனத்தில் பவனி.

* திருமோகூர் காளமேகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் புறப்பாடு.

* பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

* காளையார்கோவில் அம்மன் கதிர்குளத்தில் தபசுக் காட்சி.

* சிவகாசி விஸ்வநாதர் பெரிய விருட்ச வாகனத்தில் வீதி உலா. அம்மன் தபசுக் காட்சி, இரவு திருக்கல்யாணம்.

* கீழ்நோக்கு நாள்.

2-ந் தேதி (வெள்ளி)


* ஆழ்வார்திருநகரில் ஒன்பது கருட சேவை.

* பழனி முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.

* திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் யானை வாகனத்தில் புறப்பாடு.

* திருப்பத்தூர் திருத்தணிநாதர் திருக்கல்யாண உற்சவம்.

* அரியக்குடி சீனிவாசப் பெருமாள், பின்னங்கிளி வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (சனி)

* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் வலம் வருதல்.

* சோழவந்தான் ஜெனக மாரியம்மன் விருட்ச சேவை.

* திருமோகூர் காளமேகப் பெருமாள் காலை ராஜாங்க சேவை, இரவு கருட வாகனத்தில் திருவீதி உலா.

* மாயவரம் கவுரிமாயூர நாதர் கயிலாச வாகனத்தில் புறப்பாடு.

* காளையார் கோவில் சிவபெருமான் இரவு வெள்ளி விருட்ச சேவை.

* சிவகாசி விஸ்வநாதர் கோவில் ரத உற்சவம்.

* மேல்நோக்கு நாள்.

4-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வெள்ளி சந்திர பிரபையில் திருவீதி உலா.

* மாயவரம் கவுரிமாயூர நாதர், உத்தமர்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

* சமநோக்கு நாள்.

5-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* சர்வ ஏகாதசி.

* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் காலை காளிங்க நர்த்தனம், மாலை வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சியருளல்.

* மதுரை கூடலழகர் யானை வாகனத்தில் வீதி உலா.

* சமநோக்கு நாள்.