ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் + "||" + Occasions this week

இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்
.
23-1-2018 முதல் 29-1-2018 வரை

23-ந் தேதி (செவ்வாய்)

சஷ்டி விரதம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வெள்ளி சிம்மானத்தில் சுவாமி பவனி.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, இரவு தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.

திருச்சேறை சாரநாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் திருவீதி உலா.

சமநோக்கு நாள்.

24-ந் தேதி (புதன்)

ரத சப்தமி.

திருப்பதியில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் ரத சப்தமி திருவிழா.

திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் பவனி, வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சியருளல்.

கோவை பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம்.

காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் கருட சேவை.

திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் சிம்மாசனத்தில் பவனி.

சமநோக்கு நாள்.

25-ந் தேதி (வியாழன்)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா.

மதுைர மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.

திருச்சேறை சாரநாதர், பரமபதநாதராக சேஷ வாகனத்தில் வீதி உலா.

பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரை வாகனத்தில் புறப்பாடு.

கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (வெள்ளி)

கார்த்திகை விரதம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி நந்தீஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் யாழி வாகனத்திலும் பவனி.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சின்ன வைரத் தேரில் ரத உற்சவம், இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.

திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட சேவை.

கோவை பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.

கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (சனி)

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலையில் தந்த பல்லக்கில் பவனி, மாலையில் தங்க குதிரையில் சுவாமியும், தங்கப் பல்லக்கில் அம்பாளும் வீதி உலா.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் தெப்ப உற்சவம், இரவு தங்க தேரில் சூரசம்கார காட்சி.

திருச்சேறை சாரநாதர் ராம அவதார காட்சி அருளல்.

கோவை பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் வீதி உலா.

மேல்நோக்கு நாள்.

28-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

வைஷ்ணவ ஏகாதசி.

திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரத்தில் சுவாமி வீதி உலா.

மதுரை மீனாட்சி காரை எடுப்பு தேரில் பவனி.

காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் ரத உற்சவம்.

கோவை பாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் புறப்பாடு.

குன்றக்குடி முருகப்பெருமான் வெள்ளி கேடயத்தில் பவனி.

சமநோக்கு நாள்.

29-ந் தேதி (திங்கள்)

பிரதோஷம்.

காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் புறப்பாடு.

திருச்சேறை சாரநாதர் சூர்ணோற்சவம்.

கோவை பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி.

பழனி முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும் வீதி உலா.

சகல சிவன் கோவில்களிலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

மேல்நோக்கு நாள்.