ஆன்மிகம்

முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் + "||" + Muttalamman temple consecrated

முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திண்டிவனம் அருகே ஒலக்கூர் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருப்பணிகள் முடிவடைந்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திண்டிவனம்

ஒலக்கூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டிவனம் அருகே ஒலக்கூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிவடைந்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி காலை விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.


தொடர்ந்து அன்றைய தினம் மாலையில் முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் நேற்று காலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து 8.30 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந் தது. பின்னர் 9 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. இதில் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட, புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக மூலவர் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பரிவார சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டார்கள், நாட்டாமைதாரர்கள், கிராமமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.