குரு பகவான் தரும் யோகங்கள்


குரு பகவான் தரும் யோகங்கள்
x
தினத்தந்தி 25 Sep 2018 7:57 AM GMT (Updated: 25 Sep 2018 7:57 AM GMT)

கஜகேசரி யோகம்: குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகிறது.

இந்த யோகத்தைப் பெற்றவர்கள் செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர்ந்த பதவி போன்றவற்றைப் பெற்றவர்களாக விளங்குவர்.

குரு சந்திர யோகம்:
சந்திரனுக்கு குரு 1, 5, 9–ல் காணப்பட்டால் ‘குருச்சந்திர யோகம்’ உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் புகழ் மிக்கவர்களாகவும் நல்ல அந்தஸ்து படைத்தவர்களாகவும் இருப்பர்.

குருமங்கள யோகம்: குரு செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் ‘குரு மங்கள யோகம்’ உண்டாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் வீடு, இடம், வாகனம் போன்றவற்றை அதிகம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

ஹம்ச யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், ‘ஹம்சயோகம்’ உண்டாகிறது. நல்ல உடலமைப்பையும், ஒழுக்கமான வாழ்க்கையும் ஏற்றவர்களாக இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இருப்பர்.

சகட யோகம்: குருவுக்கு சந்திரன் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் ‘சகட யோகம்’ உருவாகிறது. வாழ்க்கை வண்டிச் சக்கரம் போல, இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே மற்றொரு தொகை வந்து சேரும். பொதுவாக குரு தரும் யோகம் உங்கள் சுயஜாதகத்தில் எப்படியுள்ளது என்பதைக் கண்டறிந்து, குருவைப் போற்றிக் கொண்டாடினால் பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். குருவோடு மற்ற கிரகங்கள் சேர்ந்திருந்தால், அதன் பாதசார பலமறிந்து அதற்குரிய ஸ்தல வழிபாட்டை முன்னதாகச் செய்வது நல்லது.

Next Story