இந்த வார விசேஷங்கள்


இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 19 March 2019 9:39 AM GMT (Updated: 19 March 2019 9:39 AM GMT)

.

19-3-2019 முதல் 25-3-2019 வரை

19-ந் தேதி (செவ்வாய்)

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுகநயினார் வருசாபிஷேகம்.

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்பித்தல், இரவு அறுபத்து மூவருடன் பவனி.

நத்தம் மாரியம்மன் பால்குட ஊர்வலம், இரவு மின் விளக்கு அலங்கார தாமரையில் புறப்பாடு.

கழுகுமலை முருகப்பெருமான் வெள்ளிக்குதிரையில் பாரி வேட்டை.

திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் பவனி.

திருப்புல்லாணி ஜெகநாதர் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.

கீழ்நோக்கு நாள்.

20-ந் தேதி (புதன்)

ஹோலி பண்டிகை

பவுர்ணமி விரதம்

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தங்க தேரோட்டம்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.

பழனி முருகன் கோவிலில் வெள்ளி ரதம்.

ராமகிரிபேட்டை கல்யாண நரசிம்ம பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.

கழுகுமலை முருகப்பெருமான், திருச்சுழி திருமேனிநாதர், கங்கைகொண்டான் வைகுண்டபதி ஆகிய தலங்களில் ரத உற்சவம்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரையில் பவனி.

கீழ்நோக்கு நாள்.

21-ந் தேதி (வியாழன்)

பங்குனி உத்திரம்.

தென்திருப்பேரை மகர நெடுங் குழக்காதர், திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உற்சவம்.

சகல முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம்.

மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கு.

திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் ரத உற்சவம்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரையில் பவனி.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல்.

மேல்நோக்கு நாள்.

22-ந் தேதி (வெள்ளி)

முகூர்த்த நாள்.

மதுரை கள்ளழகர் மஞ்சள் நீராடல்.

ராமகிரிபேட்டை கல்யாண நரசிம்ம பெருமாள் ரத உற்சவம்.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு கருட வாகனத்திலும் தசாவதாரக் காட்சி.

நத்தம் மாரியம்மன் சந்தனக் குட ஊர்வலம், இரவு மின்விளக்கு அலங்காரத்துடன் வசந்த மாளிகைக்கு எழுந்தருளல்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சூரசம்ஹாரம், தங்க மயில் வாகனத்தில் பவனி.

சமநோக்கு நாள்.

23-ந் தேதி (சனி)

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.

மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.

திருவெள்ளாரை சுவேதாத்திரி நாதர் கோவில் உற்சவம்.

கும்பகோணம் சாரங்கபாணி திருக்கல்யாணம்.

சமநோக்கு நாள்.

24-ந் தேதி (ஞாயிறு)

முகூர்த்த நாள்.

சங்கடஹர சதுர்த்தி.

திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு எண்ணெய் காப்பு.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாணம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் எழுந்தருளல்.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு சுவாமியும் தாயாரும் சூரிய பிரபையிலும் பவனி.

திருவெள்ளாரை சுவேதாத்திரி நாதர் கற்பக விருட்ச வாகனத்தில் உலா, இரவு சுவாமியும் அம்பாளும் கமல பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்.

சமநோக்கு நாள்.

25-ந் தேதி (திங்கள்)

திருக்குறுங்குடி 5 நம்பிகள், 5 கருட வாகனத்தில் பவனி.

தென்திருப்பேரை பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் உற்சவம்.

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பெரிய வைரத் தேரில் ஊர் வலம், இரவு தங்க மயிலில் வீதி உலா.

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கிலும், இரவு சுவாமி- தாயார் வெள்ளி சேஷ வாகனத்திலும் பவனி.

கீழ்நோக்கு நாள்.

Next Story