அஷ்ட நரசிம்மர் தலங்கள் - சிந்தலவாடி


அஷ்ட நரசிம்மர் தலங்கள் - சிந்தலவாடி
x
தினத்தந்தி 22 May 2021 11:45 PM GMT (Updated: 2021-05-18T07:00:25+05:30)

மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாக, நரசிம்மர் அவதாரம் திகழ்கிறது.

 முனிவர்களுக்கு பெருமாள் தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். அப்படி அவர் காட்சி தந்த 8 தலங்கள், தமிழகத்தில் உள்ளன. அவை ‘அஷ்ட நரசிம்மர் தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. அந்த ஆலயங்களை சிறு குறிப்பாக இங்கே பார்க்கலாம்.

சிந்தலவாடி

ஹரியாச்சார் என்பவர், கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்து வந்தார். அவர் கனவில் தோன்றிய நரசிம்மர், தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கிடப்பதாகவும், தன் மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார், கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி நரசிம்மர் கூறியிருந்தார். எனவே இருவரும் சேர்ந்து நரசிம்மர் உருவத்தை எடுத்துக் கொண்டு, திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.

திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது, இந்த ஆலயம்.

Next Story