தினம் ஒரு திருமந்திரம்


தினம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 2 Aug 2021 7:18 PM GMT (Updated: 2 Aug 2021 7:18 PM GMT)

‘திருமந்திரம்’ என்ற பெருநூல். இவரது காலம் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள்.

திருமூலர் என்னும் பெரும் ஞானியால் உருவானது, ‘திருமந்திரம்’ என்ற பெருநூல். இவரது காலம் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள். இவர் 3 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்கள் எழுதியதாகவும் புராணங்கள் சொல் கிறது. இங்கே ஒரு திருமந்திரப் பாடலையும், அதன் பொருளையும் பார்க்கலாம்..

பாடல்:-

உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளாமணி விளக்கே..

பொருள்:-

நம்முடைய நெஞ்சமே பெரிய கோவில். நமது உடம்புதான் இறைவன் வாழும் இடம். வாய்தான், வாசல் கோபுரம். உண்மையான மெய்ப் பொருளை உணர்ந்து கொண்டவர்களுக்கு, நம்முடைய சீவன்தான் சிவலிங்கமாகத் தெரியும். பொய்வழி இயக்கும் ஐம்புலன்களும், அழகுடைய மணி விளக்காகும்.

Next Story