வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 14 Sep 2021 11:40 AM GMT (Updated: 14 Sep 2021 11:40 AM GMT)

திருமூலர் பாடி அருளிய திருமந்திரம், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது.

திருமூலர் பாடி அருளிய திருமந்திரம், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. அது ஈசனையும், அவனது பண்புகளையும், அவனுள் குடியிருக்கும் அன்பையும் இன்னும் பல செயல்களையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது. அந்த திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்..

பாடல்:-

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்

நகையில்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும்

வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை

தகையில்லை தானும் சலம் அதுவாமே..

விளக்கம்:-

ஐந்தெழுந்து மந்திரமான ‘நமசிவாய’த்தை ஓதியவர்களுக்கு பகை என்பதே கிடையாது. அவர்களுக்கு பிறரால் இகழப்படும் நிலையும் வராது. ஒவ்வொரு நாளும் நன்மையே உண்டாகும். தொடர்ந்து வரும் வினையும், முதுமையும், எங்கும் எவ்வகையிலும் அவர்களுக்கு தடையாக அமையாது. எங்கும் நறுமணத்தைப் பரப்பும் அந்த மந்திரத்தை ஓதுபவர் சிறப்படைவார்.

Next Story