வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x
தினத்தந்தி 4 May 2022 12:30 AM GMT (Updated: 4 May 2022 12:30 AM GMT)

திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம், சைவ நெறி நூல்களுக்கு இணையாக வைத்து போற்றப்படுகிறது. அப்படிப்பட்ட திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

உயிர்க்கும் உயிராய் நிற்றல் ஒண்ஞான பூசை

உயிர்க்கு ஒளிநோக்கல் மகாயோக பூசை

உயிர்பெறும் ஆவாகனம் புறப்பூசை

செயற்குஅகடை நேசம் சிவபூசையாமே.

விளக்கம்:-

உயிர்கள் எல்லாவற்றிலும், சிவபெருமான் இருப்பதை அறிந்து வழிபடுவதே ஞான பூஜையாகும். அந்த ஈசன், உயிரின் ஒளியாக நிற்பதை அறிந்து வழிபடுவதற்கு ‘மகாயோக பூஜை’ என்று பெயர். இறைவனை ஓர் உருவமாக நிறுவி வழிபடுவது புறப் பூஜையாகும். அதே இறைவனை எல்லாவற்றிலும் உயர்வான அன்பைக் கொண்டு வழிபடுவதே சிவ பூஜை ஆகும்.


Next Story