உருவமும்.. அருவுருவமும்..


உருவமும்.. அருவுருவமும்..
x
தினத்தந்தி 12 May 2022 4:26 PM GMT (Updated: 2022-05-12T21:56:57+05:30)

சென்னை தி.நகர் பகுதியில் இருக்கிறது, அகஸ்தீஸ்வரர் திருக்கோவில். கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்திருக்கிறது, இந்த ஆலயம்.

மூலவரான அகஸ்தீஸ்வரர் சன்னிதியின் அருகிலேயே, அம்பாள் சுந்தரவடிவாம்பிகையின் சன்னிதியும் அமைந்திருக்கிறது. இரண்டு சன்னிதிகளுமே கிழக்கு நோக்கிதான் இருக்கிறது.

இந்த ஆலயத்தின் மூலவர் சன்னிதி கொஞ்சம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, சற்றே பள்ளமான பகுதியில், தரைமட்டத்தில் இருந்து கொஞ்சம் கீழே இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு சிவலிங்கத்தின் பின்பகுதியில் சிவபெருமானும், பார்வதி தேவியும் சிலை வடிவமாக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கும் காட்சியையும் காணலாம்.

பொதுவாக கருவறையில் சிவலிங்கம்தான் இருக்கும். ஓரிரு ஆலயங்களில் சிவலிங்கத்தின் பின்பகுதியின் சிவ-பார்வதி உருவம் இருந்தாலும், அது சுதைச் சிற்பமாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் அருவுருவமான சிவலிங்கத்தின் பின்புறம், உருவத்தின் வெளிப்பாடான சிலை வடிவமாக சிவனும் பார்வதியும் இருப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாக இருக்கிறது.


Next Story