பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா


பாரியூர்  அமரபணீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
x

பாரியூர் அமரபணீஸ்வர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நாளை நடக்கிறது.

ஈரோடு

கடத்தூர்:

பாரியூர் அமரபணீஸ்வர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நாளை நடக்கிறது.

அமரபணீஸ்வரர் கோவில்

கோபி அருகே உள்ள பாரியூரில் பிரசித்தி பெற்ற அமரபணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆனி திருமஞ்சன விழா இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி அளவில் கணபதி பூஜையுடன் தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு லட்சார்ச்சனையும், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனையும், மாலை 3 மணிக்கு மீண்டும் லட்சார்ச்சனையும், 5 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத்தொடர்ந்த சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆனி திருமஞ்சன விழா

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. இதையொட்டி சிவகாமி அம்மாள், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. பின்னர் மதியம் 2.30 மணி அளவில் சாமிக்கும், அம்மனுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


Next Story