வீடு–மனை பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனிக்க வேண்டியவை


வீடு–மனை  பத்திரப் பதிவுக்கு  முன்னர் கவனிக்க   வேண்டியவை
x
தினத்தந்தி 13 April 2019 4:00 AM IST (Updated: 12 April 2019 5:25 PM IST)
t-max-icont-min-icon

புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வீடு–மனை வாங்க முடிவு செய்தவர்கள், பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில வி‌ஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதிகளில் வீடு–மனை வாங்க முடிவு செய்தவர்கள், பத்திரப் பதிவுக்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில வி‌ஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

‘லீகல் ஒப்பீனியன்’

சம்பந்தப்பட்ட வீடு–மனை சம்பந்தமான அனைத்து வகை ஆவணங்களையும் ஒரு வழக்கறிஞரிடம் காட்டி, அவற்றின் மீது சட்ட ஆலோசனைகளை பெற வேண்டும்.  

உள்ளாட்சி அமைப்பு அங்கீகாரம்

மனைப்பிரிவிற்கு நகர் மன்றம் ஒப்புதல் வழங்கிய தீர்மானம், நகர் ஊரமைப்பு இயக்குநர் அல்லது மண்டல துணை இயக்குநர் அவர்களின் தொழில்நுட்ப ஒப்புதல் ஆணையை, பத்திரத்தின் ஒரு பகுதியாக குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். 

மூலப் பத்திர நகல்கள்

அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் பல மனைகள் விற்கப்படும் நிலையில் நிலத்தின் உரிமையாளர் எல்லோருக்கும் மூலப்பத்திர அசலைக் கொடுக்க இயலாது. எனவே, சம்பந்தப்பட்ட பத்திரங்கள் அனைத்திற்கும் நகல் கேட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து, பெற்றுக் கொள்ள வேண்டும். 

தூர்ந்த கிணறு கவனம்

வாங்க உத்தேசித்துள்ள மனைப்பிரிவு அமைந்துள்ள பகுதியில் ஏதாவது, பழைய கிணறு அலது போர்வெல் தூர்ந்த நிலையில் இருந்து, அவை மூடப்பட்டிருக்கலாம். வாங்க உத்தேசம் செய்யப்பட்ட மனையில் அவ்வாறு மூடப்பட்ட கிணறு அல்லது போர்வெல் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அலுவலகம் பற்றிய தகவல்கள்

வீட்டு மனை அமைந்துள்ள பகுதியின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றின் அலுவலக முகவரியை தெரிந்து வைத்திருப்பது அவசியம். மேலும், உள்ளாட்சி மன்ற தலைவர், வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக 

அலுவலர், துணை நில அளவையாளர் (Deputy Surveyor), நகர அளவையாளர் (Town Surveyor), சார் பதிவு அலுவலகம் ஆகியவை பற்றிய தகவல்களையும் அறிந்து வைத்திருப்பது  அவசியம்.

Next Story