ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1–1 என்ற கணக்கில் சமன் செய்தது.
டம்புல்லா,
அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஆட்டம் டம்புல்லாவில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட் வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. இலங்கைக்கு எதிரான வங்காளதேச அணி 300 ரன்களை கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். 8–வது சதத்தை பூர்த்தி செய்த தமிம் இக்பால் 127 ரன்களும் (142 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷகிப் அல்–ஹசன் 72 ரன்களும் (71 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), சபிர் ரகுமான் 54 ரன்களும் (56 பந்து, 10 பவுண்டரி) விளாசினர்.
பின்னர் விளையாடிய இலங்கை அணி கடின இலக்கை நெருங்க முடியாமல் தோல்வி அடைந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.
Next Story