கிரிக்கெட்

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகல் + "||" + Australia-England crash 'Boxing Day' Test match Tomorrow is beginning

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகல்

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகல்
ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

ஆ‌ஷஸ் டெஸ்ட்

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆ‌ஷஸ் கோப்பையை மீண்டும் வசப்படுத்தி விட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.

‘பாக்சிங் டே’ என்றால் என்ன?

‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் குஸ்தியில் இறங்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது. அந்த பெயர் வந்ததற்கு சில காரணங்கள் உண்டு.

ஆஸ்திரலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்களின் முன்பு பெரிய பாக்ஸ் வைப்பார்கள். ஆலயத்திற்கு வருபவர்கள் நன்கொடை வழங்குவார்கள். மறுநாள் (டிசம்பர் 26) அந்த பாக்ஸ் பிரித்து அதில் உள்ள பணம், பரிசுப்பொருட்கள் ஏழை எளியோருக்கு வழங்கப்படும். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள்.

முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் மறுநாள் தான் தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்வார்கள். அப்போது அவர்களது முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக கொடுத்து அனுப்புவது வழக்கம். அதன் அடையாளமாகவும் ‘பாக்சிங் டே’ பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

மெல்போர்னில்...

1951–ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ பெயருடன் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. சில காரணங்களால் குறிப்பிட்ட ஆண்டுகள் அந்த நாளில் டெஸ்ட் போட்டியை நடத்த முடியவில்லை. இதன் பிறகு 1980–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘பாக்சிங் டே’ டெஸ்டை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26–ந்தேதி ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருக்கும். இந்த முறை அந்த பாரம்பரிய நாளில் இங்கிலாந்து அணி கால்பதிக்கிறது.

90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் 2010–ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை. இங்கிலாந்து அணி இங்கு இதுவரை 55 டெஸ்டுகளில் விளையாடி அதில் 20–ல் வெற்றியும், 28–ல் தோல்வியும், 7–ல் டிராவும் கண்டு இருக்கிறது.

ஸ்டார்க் விலகல்

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலது குதிகாலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுவதால் 4–வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இந்த தொடரில் இதுவரை 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஸ்டார்க்கின் விலகல் அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். அவருக்கு பதிலாக ஜாக்சன் பேர்டு சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், ‘இந்த டெஸ்டை தவற விடுவது வருத்தம் அளிக்கிறது. 100 சதவீதம் உடல்தகுதியை எட்டாத நிலையில் இந்த டெஸ்டில் நான் விளையாடினால் அது சுயநலமாக இருக்கும். இப்போது சில நாட்கள் ஓய்வு கிடைப்பதால் காயம் முழுமையாக குணமடைவதற்கு உதவிகரமாக இருக்கும். சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்டில் பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன். ஆ‌ஷஸ் தொடரை வென்றது மகிழ்ச்சியான வி‌ஷயம். இனி கொஞ்சம் நெருக்கடி இல்லாமல் விளையாட முடியும்’ என்றார்.

இதே போல் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிரேக் ஓவர்டானும் இந்த டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதுமுக வீரர் டாம் குர்ரன் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்: உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப்பொருள் தாக்குதல்
இங்கிலாந்து உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.
2. ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பேட்டி
‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.
3. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இழந்தாலும் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. தொடரை வென்ற இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேறியது.
4. கடைசி டெஸ்ட் போட்டி: டிராவிட்டிடம் பேசியது பதற்றத்தை தணித்தது - இந்திய வீரர் ஹனுமா விஹாரி
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பு டிராவிட்டிடம் பேசியது பதற்றத்தை தணித்தது என இந்திய வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
5. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்: ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174/6
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. #INDVsENG