ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் விராட் கோலி


ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் விராட் கோலி
x
தினத்தந்தி 5 Jan 2018 7:29 AM GMT (Updated: 5 Jan 2018 7:55 AM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். #IPLRetention #viratkohli

மும்பை,

பணம் கொழிக்கும் 20 ஓவர் விளையாட்டு தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். 

11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 27, 28–ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தியும் வைத்துக் கொள்ள முடியும்.

தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 4–ந்தேதிக்குள் (நேற்று) சமர்பிக்க ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி அந்த பட்டியல் வழங்கப்பட்டது. எந்தெந்த அணிகள் யார்–யாரை தொடர்ந்து நீட்டிக்க செய்திருக்கிறது என்ற விவரம் அதிகாரபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டது. இதில் எதிர்பார்த்தது போலவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பெங்களூரு அணி 17 கோடிக்கு ஒப்பந்தம் செய்து தக்க வைத்துள்ளது. ஐபில் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த ஒரு வீரரும் இதற்கு முன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. 

தோனி (ரூ.15 கோடி) சுரேஷ் ரெய்னா (ரூ.11 கோடி)  தொகைக்கு ஒப்பந்தம் செய்து சென்னை அணி  தக்கவைத்துள்ளது. ஜடேஜாவை ரூ.7 கோடி தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மா(ரூ.15 கோடி) ஹர்திக் பாண்ட்யா (ரூ.11 கோடி) ஜஸ்பிரித் பும்ரா (ரூ.7 கோடி) ஆகியோரை மும்பை அணி தக்க வைத்துள்ளது. டி வில்லியர்ஸை ரூ.11 கோடி தொகைக்கு பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னரை ரூ.12 கோடிக்கு ஐதராபாத் அணி தக்க வைத்துள்ளது.   #IPLRetention  #IPL  #viratkohli


Next Story