இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு-பிசிசிஐ


இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு-பிசிசிஐ
x
தினத்தந்தி 17 Jan 2018 11:51 AM GMT (Updated: 17 Jan 2018 11:51 AM GMT)

இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை

 சர்வதேச கிரிக்கெட் போர்டு விதிக்கும் சில விதிகளை இந்திய அணி பின்பற்றுவது இல்லை. தற்போது தான் சில விதிகளை இந்திய அணி பின்பற்றுவது குறித்து விவாதித்து வருகிறது. அதில் பகலிரவு டெஸ்ட் போட்டியும் ஒன்று.

 ஐசிசி கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நாடுகளும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை பின்பற்ற துவங்கிவிட்டன. 

ஆனால் ஐசிசி.,யின் விதிகளை தற்போதுவரை பிசிசிஐ., மதிக்கவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் விரைவில் பகலிரவு டெஸ்டில் இந்திய அணி பங்கேற்பதும், நடத்துவது குறித்தும் விரைவில் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#DayNightTest | #BCCI | #AnuragThakur | #AmitabhChoudhary



Next Story