கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டிவில்லியர்ஸ் + "||" + In the South African team Again tivilliyars

தென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டிவில்லியர்ஸ்

தென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டிவில்லியர்ஸ்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை.
ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய மூன்று ஒரு நாள் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் டிவில்லியர்ஸ் இடம் பிடித்துள்ளார். ஆனால் இன்றைய தினத்தில் பயிற்சிக்கு பிறகே 4-வது ஆட்டத்தில் அவரை சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தென்ஆப்பிரிக்க அணி வருமாறு:-

மார்க்ராம் (கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், நிகிடி, பெலக்வாயோ, ரபடா, ஷம்சி, ஜோன்டோ, பெஹர்டைன், ஹென்ரிச் கிளாசென்.