கிரிக்கெட்

2003 உலக கோப்பையில் தோனி விளையாடி இருந்தால், கோப்பை இந்தியாவுக்கு கிடைத்திருக்கும்; கங்குலி + "||" + Wish MS Dhoni was there in my 2003 World Cup team, Sourav Ganguly pens in his autobiography

2003 உலக கோப்பையில் தோனி விளையாடி இருந்தால், கோப்பை இந்தியாவுக்கு கிடைத்திருக்கும்; கங்குலி

2003 உலக கோப்பையில் தோனி விளையாடி இருந்தால், கோப்பை இந்தியாவுக்கு கிடைத்திருக்கும்; கங்குலி
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் தோனி விளையாடி இருந்தால், கோப்பை இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். #MSDhoni #SouravGanguly
புதுடெல்லி, 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் கங்குலி. கங்குலி தலைமையில் இந்திய அணி ஏராளமான வெற்றிகளை குவித்துள்ளது. தற்போது மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவராக உள்ள கங்குலி,  “ஏ சென்சுரி இஸ் நாட்  இனஃப்” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.  அந்த புத்தகத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து உள்ளார். 

 கங்குலி தனது புத்தகத்தில் எழுதியிருப்பதாவது: -ஒவ்வொரு போட்டியின் போதும், வீரர்கள் எவ்வாறு நெருக்கடியான நேரத்தில், அதை சமாளித்து விளையாடுகிறார்கள் என்பதை நான் அடிக்கடி கவனிப்பேன். ஒரு கேப்டனாக அது எனக்கு முக்கியம். எனக்கு தோனியை 2004-ம்ஆண்டில் இருந்துதான் தெரியும். ஏனென்றால் அப்போதுதான் அணிக்குள் தோனி அறிகமுகமாகிறார். ஆனால், தோனியின் விளையாட்டை நான் கவனித்தபோது, நாளுக்குநாள், அவரின் திறமையை மெருகேறி வந்தது. இதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவரின் விளையாட்டும் எனக்கு பிடித்துப்போனது.

2003ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. உலகிலேயே தலைசிறந்த அணியாக இந்திய அணி திகழ்ந்து வந்தது.ஆனால், 2003-ம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் மட்டும் தோனி அணியில் இருந்திருந்தால், இறுதிப்போட்டியின் முடிவு நிச்சயம் மாறி இருக்கும். 

நாம்  உலகக்கோப்பையை கைப்பற்றி இருப்போம். ஆனால், அணிக்குள் தோனி 2004ம் ஆண்டுதான் அறிமுகமானார். என்னைப் பொறுத்தவரை 2003ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தோனி இடம் பெற்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று விரும்பினேன். ஆனால், அந்த நேரத்தில் இந்தியன் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியாற்றிக் கொண்டு இருந்தார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.