கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அபார வெற்றி + "||" + New Zealand's win One Day Against England

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்  நியூசிலாந்து அபார வெற்றி
336 ரன் இலக்கை சேசிங் செய்து நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
டுனெடின்,

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் சேர்த்தது. பேர்ஸ்டோ (138 ரன், 14 பவுண்டரி, 7 சிக்சர்), ஜோ ரூட் (102 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) சதம் விளாசினர். அடுத்து 336 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான காலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில் இருவரும் டக்-அவுட் ஆனாலும் அடுத்து வந்த ராஸ் டெய்லர் அணியை நிமிர வைத்தார். அவருக்கு கேப்டன் வில்லியம்சன் (45 ரன்), டாம் லாதம் (71 ரன்), கிரான்ட் ஹோம் (23 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர்.


19-வது சதத்தை எட்டியதும் காயமடைந்த ராஸ் டெய்லர், அதை பொருட்படுத்தாமல் நிலைத்து நின்று விளையாடி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 49.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ராஸ் டெய்லர் 181 ரன்களுடன் (147 பந்து, 17 பவுண்டரி, 6 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 10-ந்தேதி நடக்கிறது.