கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி + "||" + New Zealand won the first Test against England,

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NewzealandWon #FirstTest
ஆக்லாந்து,

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நடந்தது. பகல் இரவு போட்டியாக நடந்த இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 58 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.


இதையடுத்து 369 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணியில் மலான்(23), பேர்ஸ்டோவ்(26), மொயின் அலி(28), ஆகியோர் பெரிய அளவில் சோபிக்காத போதிலும் அடுத்து வந்த ஸ்டோன்மேன் (55), ஸ்ட்டோக்ஸ் (66), வேக்ஸ் (52) ஆகியோர் மட்டும் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி 320 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து சார்பில் பவுல்ட், வாக்னர், ஆஸ்லே ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து அணியின் பவுல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 30-ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் கே.பி.முனுசாமி பேட்டி
சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
2. ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டி; தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி
மும்பையில் நடந்த ஜே.எஸ். பெரேரா நினைவு ஆடவர் டென்னிஸ் இறுதி போட்டியில் தமிழக வீரர் பஹத் முகமது வெற்றி பெற்றுள்ளார்.
3. விராட் கோலி அணியின் வெற்றி போன்றது, கர்நாடக தேர்தல் வெற்றி - ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து
கர்நாடக தேர்தலில் கிடைத்த வெற்றி, விராட் கோலி அணியின் வெற்றி போன்றது என்றும், கூட்டணிக்கு கிடைத்த பலன் என்றும் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
4. ஜமகண்டி சட்டசபை இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி
ஜமகண்டி சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சித்து யமகவுடா வெற்றி பெற்றுள்ளார்.
5. பாரீஸ் டென்னிஸ்: டொமினிக் திம் வெற்றி
பாரீஸ் டென்னிஸ் போட்டியில் டொமினிக் திம் வெற்றிபெற்றார்.