கிரிக்கெட்

‘டோனி, ஹஸ்சியிடம் கற்கிறேன்’ சென்னை அணி வீரர் ஜெகதீசன் பேட்டி + "||" + 'Tony, I learn from Hussey' Chennai team player Jegadeesan interviewed

‘டோனி, ஹஸ்சியிடம் கற்கிறேன்’ சென்னை அணி வீரர் ஜெகதீசன் பேட்டி

‘டோனி, ஹஸ்சியிடம் கற்கிறேன்’ சென்னை அணி வீரர் ஜெகதீசன் பேட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர், விக்கெட் கீப்பர் ஜெகதீசன். கோவையை சேர்ந்த 22 வயதான ஜெகதீசன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–மைக்

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர், விக்கெட் கீப்பர் ஜெகதீசன். கோவையை சேர்ந்த 22 வயதான ஜெகதீசன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மைக் ஹஸ்சியை (பேட்டிங் பயிற்சியாளர்) சந்தித்து பேசுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ‘மிஸ்டர் கிரிக்கெட்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஹஸ்சி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபித்து காட்டியவர். அவர் நிறைய பேட்டிங் நுணுக்கங்களை கற்று தருகிறார். குறிப்பாக பவுலரை மிரள வைக்கும் வகையில் எப்படி பேட்டிங் தாக்குதலை கையாள்வது என்பதை சொல்லி தருகிறார். அவரிடம் இருந்து நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.

விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை கேப்டன் டோனியிடமும் பயிற்சியின் போது பல்வேறு வி‌ஷயங்களை விவாதித்து கற்றுக்கொள்கிறேன். எனது பலவீனத்தை எப்படி சரி செய்வது, சூழ்நிலைக்கு தகுந்தபடி எப்படி கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்வது என்பதை கேட்டு தெரிந்து கொள்கிறேன்.

இவ்வாறு ஜெகதீசன் கூறினார்.