கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பேர்ஸ்டோவின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது இங்கிலாந்து + "||" + Test cricket against New Zealand: Basto's great game Collapse of the UK

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பேர்ஸ்டோவின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது இங்கிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: பேர்ஸ்டோவின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது இங்கிலாந்து
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது.

கிறைஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 94 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் பின்வரிசையில் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவும், மார்க்வுட்டும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மார்க்வுட் 52 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் சேர்த்துள்ளது. பேர்ஸ்டோ 97 ரன்களுடன் (154 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் உள்ளார். முன்னதாக கேப்டன் ஜோ ரூட் 37 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 2–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...