கிரிக்கெட்

சல்மான் கான் 5 வருட சிறை தண்டனைக்காக மனம் வருந்திய சோயிப் அக்தர் + "||" + Ex-Pak cricketer Shoaib Akhtar distraught on 'friend' Salman Khan's conviction

சல்மான் கான் 5 வருட சிறை தண்டனைக்காக மனம் வருந்திய சோயிப் அக்தர்

சல்மான் கான் 5 வருட சிறை தண்டனைக்காக மனம் வருந்திய சோயிப் அக்தர்
சல்மான் கான் 5 வருட சிறை தண்டனைக்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் மனம் வருந்தினார். #ShoaibAkhtar
ஜோத்பூர், 

நடிகர் சல்மான்கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

1998ம் ஆண்டு ராஜஸ் தானில் நடந்த இந்திப் படப் பிடிப்பில் கலந்துகொண்ட போது சல்மான்கான் வனப் பகுதிக்கு சென்று 2 மான்களை வேட்டையாடினார்.
வனப்பகுதியில் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டு கிராம மக்கள் சென்ற போது துப்பாக்கியுடன் ஜீப்பில் வந்த சல்மான்கான் பிடிபட்டார். 20 ஆண்டுகள்   நடந்த இந்த வழக்கில் நேற்று ஜோத்பூர் கீழ் கோர்ட்டு சல்மான்கானுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இதையடுத்து சல்மான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். அவருக்கு சிறையில் 106ம் எண் அறை ஒதுக்கப் பட்டது. இந்த அறையில் தான் சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவும் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் சல்மான்கானும் இருக்கிறார். 

சல்மான் கானுக்கு  5 வருட சிறை தண்டனை  வழங்கபட்டது வருத்தம் அளிக்கிறது என  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் மனம் வருந்தி உள்ளார். இது குறித்து அவர டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:-

என் நண்பர் சல்மான் கான் 5 வருடம் சிறைத்தண்டனை அளிக்கபட்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால், சட்டம் அதன் போக்கில் செல்கிறது  மரியாதைக்குரிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்க வேண்டும் ஆனால் நான் இந்த  தண்டனை கடுமையானது என்று நினைக்கிறேன் ஆனால் என் இதயம் அவரது குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு செல்கிறது . அவர் விரைவில் வெளியே வரவேண்டும் என கூறி உள்ளார்.