கிரிக்கெட்

சென்னையில் நடக்க இருந்த ஐ.பி.எல். போட்டி மாற்றம்: டிக்கெட் கட்டணத்தை நாளை முதல் திரும்ப பெறலாம் + "||" + IPL in Chennai Competition change: Ticket fees You can get back tomorrow

சென்னையில் நடக்க இருந்த ஐ.பி.எல். போட்டி மாற்றம்: டிக்கெட் கட்டணத்தை நாளை முதல் திரும்ப பெறலாம்

சென்னையில் நடக்க இருந்த ஐ.பி.எல். போட்டி மாற்றம்: டிக்கெட் கட்டணத்தை நாளை முதல் திரும்ப பெறலாம்
காவிரி பிரச்சினை எதிர்ப்பு காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்க இருந்த எஞ்சிய 6 ஆட்டங்களும் புனேவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

சென்னை, 

காவிரி பிரச்சினை எதிர்ப்பு காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்க இருந்த எஞ்சிய 6 ஆட்டங்களும் புனேவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த 6 ஆட்டங்களுக்கும் குறைந்தபட்ச விலை டிக்கெட் (ரூ.1,300) தவிர ரூ.2,500, ரூ,4,500, ரூ.5,000, ரூ.6,500 ஆகிய விலைகளிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் ரசிகர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணம் திரும்ப வழங்கப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் 20–ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள 3–வது கவுண்ட்டரில் டிக்கெட்டை கொடுத்து அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதாவது சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘புக்மைஷோ’ பாக்ஸ் ஆபீசில் ரொக்கம் அல்லது கிரெடிட்கார்டு, டெபிட் கார்டு மூலம் டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே இங்கு பணத்தை திரும்ப முடியும். ஆன்–லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு அதன் வழியாக பணம் திருப்பி செலுத்தப்படும்.

20–ந்தேதிக்கு பிறகு டிக்கெட் கட்டணம் திரும்ப செலுத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...