கிரிக்கெட்

2019 உலக கோப்பை போட்டிக்கு பிறகே ஓய்வு எப்போது என்பதை அறிவிப்பேன்: யுவராஜ்சிங் + "||" + Will take a call on my career after 2019 World Cup: Yuvraj Singh

2019 உலக கோப்பை போட்டிக்கு பிறகே ஓய்வு எப்போது என்பதை அறிவிப்பேன்: யுவராஜ்சிங்

2019 உலக கோப்பை போட்டிக்கு பிறகே ஓய்வு எப்போது என்பதை  அறிவிப்பேன்: யுவராஜ்சிங்
2019 உலக கோப்பை போட்டிக்கு பிறகே ஓய்வு எப்போது என்பதை அறிவிப்பேன் என்று இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். #IPL #YuvrajSingh
புதுடெல்லி,

இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவராக விளங்கிய யுவராஜ்சிங், அண்மைக்காலமாக மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிராக கடைசியாக கடந்த  2017 ஆம் ஆண்டு யுவராஜ்சிங் விளையாடி இருந்தார். இதன்பிறகு, இந்திய அணியில்  யுவராஜ்சிங் இடம் பெறவில்லை. தற்போது, ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் யுவராஜ்சிங், தற்போதுவரை பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. 

இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட யுவராஜ்சிங்கிடம், ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த யுவராஜ்சிங், “ 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவது குறித்து நான் கவனம் செலுத்த உள்ளேன். 2019 ஆம் ஆண்டு முடிந்ததும் ஓய்வு குறித்து அறிவிப்பேன். 2000-த்தில் இருந்து நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். 17 முதல் 18 ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன். எனவே, 2019 ஆம் ஆண்டில் கண்டிப்பாக ஓய்வு எப்போது என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.