மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலையான தொடக்கம்


மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலையான தொடக்கம்
x
தினத்தந்தி 28 April 2018 3:20 PM GMT (Updated: 28 April 2018 3:20 PM GMT)

11வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலையான தொடக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. #IPL2018

புனே, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா புனேயில்  உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் 27வது லீக் ஆட்டம் நடைப்பெறுகிறது. இந்த இரவு ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப்போட்டியில் , டாஸ் வென்ற  மும்பை இந்தியன்ஸ் அணி   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரா்கள் அம்பத்தி ராயுடுயும் ஷேன் வாட்சனும்  தொடக்கத்தில்  இருந்தே சிறிது தடுமாற்றத்துடன் விளையாடி வந்தனா். இந்நிலையில் ஷேன் வாட்சன்  குணால் பாண்ட்யா  போட்ட  பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறி ரசிகா்கள் இடையே   ஏமாற்றத்தை ஏற்படுத்தினா். இவரை அடுத்து  இடது கை ஆட்டகாரரான சுரேஷ் ரெய்னா களம் கண்டாா்.

சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்த அம்பத்தி ராயுடு விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தாா். இதனால் அணியின் ரன் சற்று வேகமாக அதிகாிக்க தொடங்கியது. பின்னா் மும்பை அணியின் பந்துகளை நாலபுறமும சிதறடிக்க தொடங்கினாா் அம்பத்தி ராயுடு. இதனால் அம்பத்தி ராயுடு 45 ரன்களுடனும் ரெய்னா 31 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனா்.

தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 10 ஓவா்கள் முடிவில் 1 விக்கெட்டு மட்டுமே  இழந்து 91 ரன்களை சோ்த்து விளையாடி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீசிய  குணால் பாண்ட்யா மட்டும் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளாா்.

Next Story