கிரிக்கெட்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது + "||" + The teams. Engaged in gambling 7 people arrested

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அருகில் உள்ள ராஜேந்திர நகரில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்தூர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்தூர், 

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அருகில் உள்ள ராஜேந்திர நகரில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்தூர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த வீட்டில் இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 50 செல்போன்கள், டெலிவி‌ஷன்கள், லேப்–டாப் உள்ளிட்ட சூதாட்டத்துக்கு பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சூதாட்ட கும்பலுக்கு, சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.