கிரிக்கெட்

‘சென்னைக்கு எதிரான வெற்றி திருப்தி அளிக்கிறது’ - டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து + "||" + 'Success against Chennai is satisfying' - Delhi team captain Shreyas Aiyar commented

‘சென்னைக்கு எதிரான வெற்றி திருப்தி அளிக்கிறது’ - டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து

‘சென்னைக்கு எதிரான வெற்றி திருப்தி அளிக்கிறது’ - டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து
சென்னைக்கு எதிரான வெற்றி திருப்தி அளிக்கிறது என டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறினார்.
புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது. இதில் டெல்லி அணி நிர்ணயித்த 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு பிறகு டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘வெற்றிக்காக ஏங்கி தவித்தோம். சிறந்த அணிகளில் ஒன்றான சென்னைக்கு எதிராக வந்த இந்த வெற்றி திருப்தி அளிக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் நாங்கள் சிறப்பாகவே தயாரானோம். ஆனால் எங்களது திட்டத்தை களத்தில் செயல்படுத்த இயலவில்லை. இந்த ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று துறையிலும் நாங்கள் ஒருசேர ‘கிளிக்’ ஆனதால் வெற்றி பெற்றோம்’ என்றார்.