கிரிக்கெட்

சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்த தோனி + "||" + MS Dhoni Hosts Sachin Tendulkar's Die Hard Fan Sudhir Gautam For Lunch

சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்த தோனி

சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்த தோனி
சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை வீட்டிற்கு அழைத்து, தோனி மதிய உணவு விருந்து அளித்துள்ளார். #Dhoni
ராஞ்சி,

உடல் முழுவதும் இந்திய மூவர்ணக்கொடி நிறத்தை பூசிக்கொண்டு, இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண வரும் ரசிகரான சுதிர் கவுதமை, கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள், எவரும் பார்க்காமல் இருந்திருப்பது கடினம். 

சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை சச்சின் தெண்டுல்கர் பலமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சுதீர் கவுதமை, இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி, தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து மதிய உணவு விருந்து அளித்துள்ளார். சுதிர் கவுதம், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. டோனி போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய ரஷீத் கான் !
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டோனியின் தனித்துவமான ஷாட்களில் ஒன்றான ஹெலிகாப்டர் ஷாட் போலவே, ரஷித் கான் பந்தை சிக்சருக்கு விளாசியது ரசிகர்களை கவர்ந்தது.
2. தெண்டுல்கரை முந்திய கோலி; ஒப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை: சச்சின் தெண்டுல்கர்
இந்திய கேப்டன் விராட் கோலி முன்னணி வீரர்களில் ஒருவர் என்றும் ஆனால் ஒப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
3. சச்சின் டெண்டுல்கருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தது: கங்குலி வெளியிட்ட ரகசியம்
சச்சின் டெண்டுல்கருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தது என்று கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். #SachinTendulkar
4. தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். #Dhoni
5. அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதால் வாட்டர் பாயாக மாறிய தோனி
இந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான டோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். #MSDhoni #INDvIRE