கிரிக்கெட்

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை பெறுகிறார் விராட் கோலி + "||" + Virat Kohli To Receive Polly Umrigar Award For Best International Cricketer

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை பெறுகிறார் விராட் கோலி

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை பெறுகிறார் விராட் கோலி
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ViratKohli
பெங்களூரு,

இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.சி.ஐ. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து உள்ளது.

இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோலி பெறுகிறார். 2016-2017,2017-2018 ஆண்டுகளில் சிறந்த சர்வதேச வீரர் என்ற வகையில் விராட் கோலியை இந்த விருதை பெற உள்ளார். 

பெங்களூருவில் வரும் செவ்வாய்க்கிழமை இந்த விருது வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது. மகளிர் பிரிவில், ஹர்மன் பிரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஆகிய இருவரும் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான (2016-2017,2017-2018) பிரிவில் விருதை பெற உள்ளனர். தொடர்புடைய செய்திகள்

1. விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு
டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
2. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.
3. வீரர்களை தேர்வு செய்வது எனது பணி இல்லை: விராட் கோலி காட்டம்
வீரர்களை தேர்வு செய்வது எனது பணி இல்லை என்று கருண் நாயர் அணியில் சேர்க்கப்படாத விவகாரத்தில் விராட் கோலி காட்டமாக பதிலளித்தார்.
4. ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து
ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுக்கும் கவுரவமிக்க ‘கேல்ரத்னா’ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.