கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து பெண்கள் அணி 250 ரன்கள் குவித்து உலக சாதனை நியூசிலாந்தின் சாதனையை தகர்த்தது + "||" + Over 20 cricket England women's team score 250 runs world record

20 ஓவர் கிரிக்கெட்டில் இங்கிலாந்து பெண்கள் அணி 250 ரன்கள் குவித்து உலக சாதனை நியூசிலாந்தின் சாதனையை தகர்த்தது

20 ஓவர் கிரிக்கெட்டில் 
இங்கிலாந்து பெண்கள் அணி 250 ரன்கள் குவித்து உலக சாதனை 
நியூசிலாந்தின் சாதனையை தகர்த்தது
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 250 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

டவுன்டான், 

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 250 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

இங்கிலாந்து 250 ரன்

நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் டவுன்டானில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து– தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. டாமி பியூமோன்ட் 116 ரன்களும் (52 பந்து, 18 பவுண்டரி, 4 சிக்சர்), டேனியலி வியாட் 56 ரன்களும் விளாசினர்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 121 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

ஒரே நாளில் உடைந்த சாதனை

பெண்கள் 20 ஓவர் போட்டி வரலாற்றில் இது தான் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதே நாளில் காலையில் நடந்த முதல் லீக்கில் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு 216 ரன்கள் திரட்டியதே அதிகபட்சமாக இருந்தது. அடுத்த சில மணி நேரத்தில் இங்கிலாந்து அணி அந்த சாதனையை தகர்த்து இருக்கிறது.

20 ஓவர் போட்டியில் முதல்முறையாக சதம் அடித்த 27 வயதான டாமி பியூமோன்ட் கூறுகையில், ‘காலையில் நியூசிலாந்து வீராங்கனைகள் உலக சாதனை நிகழ்த்தியதை பார்த்தோம். ஆனால் எங்களது பயிற்சியாளர் மார்க் ராபின்சன் போட்டிக்கு முன்பாக எங்களிடம் பேசும் போது, சாதனையை முறியடிக்க முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார். ஆனால் அதை எங்களில் சில வீராங்கனைகள் சவாலாக எடுத்து கொண்டோம். ஆடுகளம் நம்ப முடியாத அளவுக்கு பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருந்தது. ஒரே நாளில் இரண்டு அணிகளின் அதிரடியால் நிலைகுலைந்து போன தென்ஆப்பிரிக்க வீராங்கனைகளுக்காக வருந்துகிறேன்’ என்றார்.

ஆண்கள் அணியை போல்...

சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து ஆண்கள் அணி, ஒரு நாள் கிரிக்கெட்டில் 481 ரன்கள் சேர்த்து புதிய சரித்திரம் படைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது பெண்கள் அணியினரும் மிரட்டியிருக்கிறார்கள்.

இந்த முத்தரப்பு தொடரில் நாளையும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. காலையில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கும் இங்கிலாந்து அணி இரவில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.



தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் திடீர் அதிர்ஷ்டம்: 200 ஆட்டங்களில் கேப்டனாக இருந்து டோனி சாதனை
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
2. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அணியில் இருந்து மேத்யூஸ் நீக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றில் 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.
3. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: போட்டியில் இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றிபெற்றது.
4. மாரத்தானில் கென்ய வீரர் உலக சாதனை
கென்யாவின் எலியாட் கிப்சோஜ் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
5. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்–ஹாங்காங் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கை இன்று எதிர்கொள்கிறது.