கிரிக்கெட்

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதால் வாட்டர் பாயாக மாறிய தோனி + "||" + Humility personified: MS Dhoni fulfills his duties as water boy during second T20I against Ireland

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதால் வாட்டர் பாயாக மாறிய தோனி

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதால் வாட்டர் பாயாக மாறிய தோனி
இந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான டோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். #MSDhoni #INDvIRE
டப்ளின், 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக அருகில் உள்ள அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்றது. 

அயர்லாந்துக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று, டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில்,  இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

முன்னதாக, நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் மூத்த வீரரும், விக்கெட் கீப்பருமான தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. 
இதனால் இந்த போட்டியில் விளையாடாத டோனி, இந்திய அணி பேட்டிங் பிடித்து கொண்டிருந்தபோது, பேட்ஸ்மேன்களின் கிட்பேக் சுமந்தபடி மைதானத்திற்குள் வந்தார். 

இந்திய அணியின் மூத்த வீரராகவும், உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமாகவும் விளங்கும் தோனி, எந்த வித “ ஈகோ”வும் பார்க்காமல், இளம் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர்.