கிரிக்கெட்

ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து நான் கற்று கொள்கிறேன்; ஹர்திக் பாண்ட்யா + "||" + I keep on learning from my mistakes with every game; Hardik Pandya

ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து நான் கற்று கொள்கிறேன்; ஹர்திக் பாண்ட்யா

ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து நான் கற்று கொள்கிறேன்; ஹர்திக் பாண்ட்யா
ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து நான் கற்று கொள்கிறேன் என்று பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

பிரிஸ்டல்,

இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா (வயது 24).  இங்கிலாந்திற்கு எதிரான நேற்றைய 3வது மற்றும் இறுதி சர்வதேச டி20 போட்டியில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற புள்ளி கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.  நேற்று நடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பாண்ட்யா சிறப்புடன் செயல்பட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டி20 போட்டிகளை வேடிக்கையான ஒன்றாகவே நான் காண்கிறேன்.  பந்து வீச்சில் யார்கர்களுக்கு பதிலாக வேறுபட்ட வகையில் பந்து வீசுவதிலேயே நான் கவனம் செலுத்தினேன்.

நான் ஒவ்வொரு போட்டியிலும் கற்று கொள்கிறேன்.  எனது தவறுகளில் இருந்து கற்று கொள்கிறேன் என்பதனை உறுதி செய்து கொள்கிறேன்.  அது எனக்கு உதவிடுகிறது என கூறியுள்ளார்.

எனது பந்து வீச்சில் முதல் ஓவரில் 22 ரன்கள் எடுக்கப்பட்ட தருணத்தினை நான் நினைவில் கொள்கிறேன்.  நான் இயல்புடனேயே இருந்தேன்.  நீங்கள் சரியான தொலைவில் பந்து வீசினால் விக்கெட்டுகளை கைப்பற்றி, மிக பெரிய அளவில் ரன்கள் விட்டு கொடுப்பதனை நிறுத்திடலாம் என அவர் கூறியுள்ளார்.