கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் அடில் ரஷித் + "||" + Adil Rashid back in England Test team

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் அடில் ரஷித்

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் அடில் ரஷித்
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் அடில் ரஷித் இடம் பிடித்தார்.
லண்டன்,

சொந்த மண்ணில், இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார்.


30 வயதான ரஷித் இதுவரை 10 டெஸ்டுகளில் ஆடி 38 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தார். சிவப்பு நிற பந்துகளில் விளையாடுவதை தவிர்த்து குறுகிய வடிவிலான போட்டிகளில் மட்டும் தற்போது கவனம் செலுத்துவதாக அவர் கூறி வந்த நிலையில், திடீரென டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. எஸ்செக்ஸ் கவுண்டி அணிக்காக ஆடும் வேகப்பந்து வீச்சாளர் 25 வயதான ஜாமி போர்ட்டர் முதல் முறையாக இங்கிலாந்து அணிக்கு தேர்வாகியுள்ளார்.

இங்கிலாந்து அணி வருமாறு:- ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலஸ்டயர் குக், சாம் குர்ரன், கீடான் ஜென்னிங்ஸ், டேவிட் மலான், ஜாமி போர்ட்டர், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ்.


தொடர்புடைய செய்திகள்

1. சிலநாள் மந்த நிலைக்குப்பின், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அலைமோதியது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
2. மீண்டும் காதல்? ஜோடியாக சுற்றும் ஓவியா-ஆரவ்
ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’
உலக செஸ் போட்டியில், கார்ல்சென் மீண்டும் டிரா செய்தார்.
4. வன ஊழியரை கொன்ற காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்
வன ஊழியரை கொன்ற காட்டு யானை மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
5. அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார், நவாஸ் ஷெரீப்
சகோதரர் கைது எதிரொலியாக, அரசியல் நடவடிக்கைகளை நவாஸ் ஷெரீப் மீண்டும் தொடங்கினார்.