கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றி + "||" + TNPL. Cricket: Kanji Weapons first win

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி, காஞ்சி வீரன்ஸ் முதல் வெற்றியை பதிவு செய்தது.
நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த காஞ்சி அணி 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபா அபராஜித் 41 ரன்கள் (32 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து களத்தில் இருந்தார். பின்னர் களம் கண்ட கோவை பேட்ஸ்மேன்களை, காஞ்சி பவுலர்கள் நிமிர விடாமல் அடக்கினர். எளிய இலக்கை கூட எட்ட முடியாமல் தத்தளித்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 102 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி அணி வெற்றி பெற்றது. அவுசிக் சீனிவாஸ் 3 விக்கெட்டுகளும், திவாகர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

5-வது ஆட்டத்தில் ஆடிய காஞ்சி அணிக்கு இது தான் முதல் வெற்றியாகும். முந்தைய 4 ஆட்டங்களிலும் தோற்று இருந்தது. கோவை கிங்சுக்கு இது 3-வது தோல்வியாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பெண்களை சோதனை செய்ய தனிக்கூண்டு அமைப்பு அசம்பாவித சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருகின்ற பெண்களை சோதனை செய்ய நுழைவு வாயில் அருகில் தனியாக கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. தீக்குளிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
2. சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.
3. நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை திருத்தி அமைக்க வலியுறுத்தல்
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை திருத்தி அமைக்கக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
4. தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய நெல்லை கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி
தூத்துக்குடியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென ஏறிய நெல்லை கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
5. துளிகள்
நெல்லை பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தென்னிந்திய கைப்பந்து போட்டி நெல்லையில் நடந்தது.