கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு + "||" + 3rd Test against India; England won the toss and elected to field

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்  போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
நாட்டிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்சில் நடந்த 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.  இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடி வருகிறது.