கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் அதிகாரம் பறிப்பு + "||" + Indian cricket board executives Power Flush

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் அதிகாரம் பறிப்பு

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் அதிகாரம் பறிப்பு
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான அதிகாரங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத்ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தேர்வு குழு மற்றும் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியை தவிர்த்து மற்றவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சி.கே.கண்ணா (பொறுப்பு), செயலாளர் அமிதாப் சவுத்ரி (பொறுப்பு), பொருளாளர் அனிருத் சவுத்ரி ஆகியோர் நிர்வாக கமிட்டியின் அனுமதி இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது.

அதே போல் அவர்களின் அதிகாரபூர்வமான பயணத்திற்கும் கமிட்டியின் அனுமதியை பெற வேண்டியது அவசியமாகும். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட பணிகளை தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி கவனிப்பார்.