கிரிக்கெட்

காதலியை மணக்கிறார், சஞ்சு சாம்சன் + "||" + Loves the beloved, Sanju Samson

காதலியை மணக்கிறார், சஞ்சு சாம்சன்

காதலியை மணக்கிறார், சஞ்சு சாம்சன்
இந்திய வீரர் சஞ்சு சாம்சன், தனது காதலியை மணக்க உள்ளார்.
திருவனந்தபுரம்,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் 23 வயதான சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.


கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது கல்லூரிகால காதலி சாரு என்பவரை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் 22-ந்தேதி நடக்கிறது. காதலியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாம்சன், ‘எங்களது காதலுக்கு பெற்றோரின் சம்மதம் வாங்க, காதலித்து வந்த கல்லூரி தோழி குறித்து வெளியில் தெரிவிக்காமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பொறுமை காத்தேன். எப்போது இந்த புகைப்படத்தை வெளியிடப்போகிறேன் என்ற ஆவலில் இருந்தேன். என்னதான் நாங்கள் காதலர்களாக இருந்தாலும், பொது இடங்களில் ஒன்றாக சுற்றியது இல்லை. இப்போது இரண்டு பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். உங்களின் (ரசிகர்கள்) இதயபூர்வமான ஆசியை வழங்குங்கள்’ என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.