கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 3–வது வெற்றி + "||" + Vijay Hazare Cup Cricket: Tamil Nadu team win 3rd

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 3–வது வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 3–வது வெற்றி
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

சென்னை, 

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு–அசாம் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 129 ரன்னும் (99 பந்துகளில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன்), கேப்டன் பாபா இந்திரஜித் 92 ரன்னும் (72 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன்), அபினவ் முகுந்த் 71 ரன்னும் (78 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்னர் 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய அசாம் அணி, தமிழக வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.1 ஓவர்களில் 204 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனால் தமிழக அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 45 ரன்னும், வாஷிகுர் ரகுமான் 43 ரன்னும், கோகுல் ‌ஷர்மா 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தமிழக அணி தரப்பில் யோமகேஷ், பாபா அபராஜித், வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். 5–வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற 3–வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் அரியானா அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை விரட்டியடித்தது. இன்னொரு லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு–காஷ்மீர் அணியை தோற்கடித்தது.


ஆசிரியரின் தேர்வுகள்...